மட்டு, அம்பாறை மாவட்டங்களில் வெள்ளம்; 23,000 குடும்பங்கள் பாதிப்பு
வடக்கு, கிழக்கு பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பித்துள்ளதால் குறிப்பாக கிழக்கில் இன்றும் பலத்த மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.
கிழக்கில் நேற்று பெய்த மழை காரணமாக வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. பொத்து விலில் ஆகக்கூடிய மழை வீழ்ச்சியாக 119 மி. மீ. மழை பதிவாகியுள்ளது.
வட மாகாணம், கிழக்கு மாகாண பகுதிகளில் பலத்த மழை பெய்வதுடன் வடமத்திய, ஊவா, அம்பாந்தோட்டை, மாத்தறை பகுதிகளிலும் இடைக்கிடை மழை பெய்யும்.
வடகிழக்கு பருவப்பெயர்ச்சியின் காரணமாக நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மாலை நேரங்களில் பலத்த மழை பெய்யும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.
கிழக்கில் இன்னும் இரண்டொரு தினங்களுக்கு இந்நிலை நீடிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு கடற்பகுதி, வடக்கு கடற்பகுதி மற்றும் மன்னார், வளைகுடா பகுதியின் கடற் பிரதேசம் என்பன சற்று கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவிக் கிறது.
அம்பாறை மாவட்ட த்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக இம் மாவட்டத்தில் 23, 100 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் அம்பாறை அரச அதிபருக்கு வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் பணிப்புரை விடுத்துள்ளார்.
தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவில் 6200 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 300 குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர் வீடுகளில் தங்கியுள்ளன.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 5200 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு 150 குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன. அக்கரைப்பற்று பிரதேச செய லாளர் பிரிவில் 1800 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு 200 குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன.
கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலாளர் பிரிவில் 1400 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 70 குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன.
இது தொடர்பாக மேலதிக தகவலை பெறுவதற்காக கல் முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் அலுவலக சமூக சேவை உத்தியோகத்தரை தொடர்பு கொள்ள முற்பட்ட போதும் அவர் கடமையில் இல்லையென அவ்வலுவலக நிருவாக உத்தியோகத்தர் குறிப்பிட்டார்.
வெள்ள நிலைமை தொடர்பாகவும், நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாகவும் அம்பாறை அரச அதிபர் சுனில் கன்னங் கரவுடன் தொடர்பு கொண்டபோது தற்போதைய காலநிலை காரணமாக அம் பாறை மாவட்ட கரையோரப் பிரதேசம் மோசமாக பாதிப்பிற்குள்ளாகியுள்ள தாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் சுற்று நிருபத் திற்கமைய வழங்குமாறும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக மழை பெய்து வருவ தனால் அதிகமான வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இதன் காரணமாக நேற்று காரியா லயங்களில் உத்தியோகத்தர்கள் வரவு மிகவும் குறைந்திருந்ததுடன், போக்குவரத்து வாகனங்களும் மிகவும் குறைந்தளவிலேயே சேவையில் ஈடுபட்டுள்ளமை குறிப் பிடத்தக்கது.
மணற்சேனை, நட்பிட்டிமுனை, சேனை க்குடியிருப்பு பிரதேச குளங்கள் நிரம்ப ஆரம்பித்துள்ளதால் குளத்தை அண்டி வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து வரு கின்றனர். நாவிதன்வெளிப் பிரதேச சவளக்கடை, சடயந்தலாவ விவசாயக் கண்டங்களில் செய்கை பண்ணப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
கிட்டங்கித் தாம்போதியில் நீர் பரவி வருவதால் மண்டூர் கல்முனை போக்கு வரத்தும் பாதிப்புற்றுள்ளது.
சென்ரல் கேம்ப் பிரதேச வீதிகள் பயணம் மேற்கொள்ள முடியாத அளவு காணப்படுகிறது.
விவசாயத்தை நம்பி வாழும் அப்பிரதேச கூலித் தொழிலாளர்கள் வீட்டில் முடக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக இரண்டாவது முறையாக பாரிய வெள்ளம் ஏற்பட் டுள்ளது.
கடந்த 48 மணித்தியாலங்களில் 89.4 மில்லி மீற்றர் மழை பெய்துள் ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
வெள்ளம் காரணமாக இரண்டாவது தடவையாக நூற்றுக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து உறவினர், நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
புதிய காத்தான்குடி, வெல்லாவெளி, கிரான், நாவற்குடா, இருதயபுரம், கல் லடி, வவுணதீவு உட்பட பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மாவட்டத்தின் பல வீதிகள் மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்துச் சேவைகளும் பாதிக் கப்பட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply