யாழ். மக்களின் பார்வைக்கு தமிழ் கைதிகளின் பெயர் விபரங்கள்
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளின் பெயர் விபரங்களை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகம் மக்களின் பார்வைக்காக வைத்துள்ளது. இவர்கள் அனைவரும் கடந்த ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதிகளில் வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் வைத்து கைது செய்யப்பட்டவர்களெனவும் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெயர் விபரங்கள் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. பெருமளவான மக்கள் இவ் விபரங்களை பார்வையிட்டுச் செல்வதாகவும் தமக்கு 800 பேரின் பெயர் விபரங்கள் இப்பட்டியலில் அடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பட்டியல் வெளியான பின்னர் இதுவரை இரண்டு பேர் அவர்களது உறவினரால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கைதிகள் அனைவரும் பூசா சிறைச்சாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply