கிழக்கிற்கு அதிகாரங்களைப் பகிர்வதற்கு மூவர்கொண்ட உயர்மட்டக்குழு அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்

கிழக்கு மாகாண சபைக்கு அதிகாரங்களைப் பகிர்வது பற்றி ஆராய்வதற்கு மூவர் கொண்ட உயர்மட்டக்குழுவொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரைவில் நியமிக்கவிருப்பதாக, கிழக்கு மாகாணசபை அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார். 
 
இந்த நிலையில் 13வது திருத்தச்சட்டமூலத்தை அடிப்படையாகக் கொண்டு கிழக்கு மாகாணசபைக்கு அதிகாரங்களைப் பகிர்வது பற்றி ஆராய்வதற்கு மூவரைக் கொண்ட உயர்மட்டக் குழுவொன்றை ஜனாதிபதி விரைவில் நியமிப்பார் என அமைச்சர் குறிப்பிட்டார்.

மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்வது பற்றி ஆராயும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும், இந்த விடயம் பற்றி ஆராய்வதற்கு மூவரைக் கொண்ட உயர்;மட்டக் குழுவை நியமிக்கும் பணிகள் இடம்பெற்றுவருவதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

கிழக்கு மகாணசபைக்கு ஒரு அதிகாரமும் இல்லையென முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அண்மையில் கூறியிருந்ததுடன், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை மாற்றும் அதிகாரம் கூட மாகாணசபைக்கு வழங்கப்படவில்லையென மாகாணசபை அமைச்சர் ஹிஸ்புல்லாவும்; கூறியிருந்தார்.

இதேவேளை, கிழக்கு மாகாணசபை எட்டு மாதங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டபோதும்;, அதில் தொடர்ந்தும் குறைபாடுகள் காணப்படுவதாக கிழக்கு மாகாணசபை அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

மாகாணசபையின் நிர்வாக அதிகாரங்கள் குறித்துக் காணப்பட்ட குழப்பங்கள் அண்மையில் பசில் ராஜபக்ஷ தலைமையில் கொழும்பில் நடைபெற்ற கூட்;டத்தில் தீPர்க்கப்பட்டாகவும், கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி, நிர்வாகச் செயற்பாடுகள், மீள்குடியேற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றி இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாணசபையின் நிர்வாகச் செயற்பாடுகளுடன் ஒன்றிணைந்து  செயற்படுவதற்கு முதற் தடவையாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதாக ஹிஸ்புல்லா கூறினார்.

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திகளைக் குழப்பும் நோக்கில் சில சமூக விரோதிகளால் கடத்தல்கள், கொலைகள், அச்சுறுத்தல்கள் போன்ற வன்முறைச் சம்பவங்கள் முன்னெடுக்கப்படுவதாக கிழக்கு மாகாணசபை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply