வட கிழக்கு மாகாணங்களுக்கு 2012க்குள் முழுமையாக மின் வசதி
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு இரு வருடத்தினுள் முழுமையாக மின்சார வசதி வழங்கப்படும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சின் செயலாளர் எம்.எம்.சி. பேர்டினாந்து தெரிவித்தார். மின்சக்தி எரிசக்தி அமைச்சின் கடந்தகால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக அண்மையில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
செயலாளர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மின்சார வசதி அளிப்பதற்காக பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்பொழுது மட்டக்களப்பு மாவட்டத்தில் 54 வீத மக்களுக்கும் திருகோணமலை மாவட்டத்தில் 56 வீத மக்களுக்கும் வவுனியா மாவட்டத்தில் 62 வீத மக்களுக்கும் மன்னார் மாவட்டத்தில் 37 வீத மக்களுக்கும் யாழ்ப்பாணத்தில் 60 வீத மக்களுக்கும் கிளிநொச்சியில் 4 வீத மக்களுக்கும் முல்லைத்தீவில் 1 வீத மக்களுக்கும் மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது.
வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் ஜனவரி 31ம் திகதிக்கு முன்னர் 14 வீத மக்களுக்கு மின்சார வசதி அளிக்கப்பட்டும் என அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply