புனர்வாழ்வு முகாமிலுள்ள 2000க்கு மேற்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க விண்ணப்பம்

புனர்வாழ்வு முகாமில் உள்ள 2000க்கு மேற்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தேர்தல் ஆணையகத்திடம் விண்ணப்பித் திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

வன்னியில் உள்ள புனர்வாழ்வு முகாம்களில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு அமைச்சு தெரிவித்துள்ளது.

11,500 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு 17 முகாம்களில் புனர்வாழ்வு வழங்கப்படுகிறது. அனைத்து வாக்களிப்பு நிலையங்களும், அந்தந்த புனர்வாழ்வு முகாம்களிலேயே அமைக்கப்படவிருப்பதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

அவர்களின் வாக்களிப்பு ஒழுங்குகளை கண்காணிப்பதற்கென, தேர்தல் திணைக்களத்தினால் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் தயாரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply