புலிகளின் ஆயுதக்கப்பல் குறித்து இலங்கை உளவுப் பிரிவு உசார்: சிங்கள வார இதழ்

புலிகள் அமைப்பினால் வெளிநாடுகளில் கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு கப்பல் ஒன்று தாய்லாந்து கடற்பகுதி ஊடாக இலங்கைக்கு வரவுள்ளதாக பாதுகாப்பு உளவுப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து பாதுகாப்பு பிரிவினர் மிக விழிப்புடன் செயல்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நாச்சிக்குடா, விடத்தல் தீவு, பூநகரி ஆகிய பகுதிகள் படையினரால் கைப்பற்றப்பட்டதையடுத்து மேற்கு கடற்பிரதேசம் முற்று முழுதாக கை நழுவியுள்ளது. இதனால், புலிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து கொள்வனவு செய்யப்படும் ஆயுதங்கள் யுத்த உபகரணங்களைக் கொண்டு வருவதற்கான பாதைகள் சீர்குலைந்துள்ளன என பாதுகாப்புப் பிரிவு உயரதிகாரி ஒருவர் சிங்கள வார இதழ் ஒன்றிற்குத் தெரிவித்துள்ளார்.

புலிகள் வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களை கப்பல்களில் ஏற்றிவந்து இலங்கை கடற்பரப்பில் நிறுத்தி, படகுகள் மூலம் விடத்தல்தீவு நாச்சிக்குடா வழியாக எடுத்து வந்துள்ளனர். ஆனால், தற்போது இப்பகுதி பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அவ்வதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply