தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்துவம் இழந்து விட்டது; தமிழ் மக்களுக்கென புதிய அரசியல் கட்சி தேவை: ஆசிரியர் தலையங்கம்
ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டம் அகிம்சை வழியிலும், ஆயுத வழியிலும் தோல்வி கண்டதை அடுத்து யாரும் அற்றவர்கள் நாங் கள் என்ற மனநிலை மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
தற்போது இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் பலமற்றவை அல்லது அவை அரச ஆதரவுடன் செயற்பட வேண்டியவை என்பதில் மாறுபட்ட கருத்திற்கு இடமில்லை. அதேவேளை தமிழர் சார்பாக இருக்கக் கூடிய அரசியல் கட்சிகளில் நம்பிக்கை வைக்கும் அளவிற்கு அந்தக் கட்சிகள் நடந்து கொள்ளவுமில்லை.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தவரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து சேவையாற்றுகின்றார். நாங்கள் துன்பப்பட்ட போதெல்லாம் அவரின் உதவி தாராளமாக கிடைத்ததென்ற உண்மையை மக்கள் நினைவுபடுத்திக் கொள்கின்றனர். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் யாழ்ப்பாணத்தில் இல்லாதபோது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டும் இங்கு தங்கி இருந்து மக்களின் தேவைகளை ஓரளவேனும் தீர்த்து வைத்தார். காலத்தின் இந்த உதவி மறப்பதற்குரியதல்ல.
அதேநேரம் யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலின் போது அவர் தனது கட்சியின் தனித்துவத்தைக் காட்ட முடியாமல் போயிற்று. அதாவது வீணைச் சின்னத்தில் அவர் போட்டியிட முடியவில்லை. இங்கு தான் தமிழர்களின் பலவீனம் தெரிகின்றது. வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் அளவிற்கு தமிழ்க் கட்சி தனது தனித்துவத்தை விட் டுக் கொடுக்க வேண்டிய தேவையுள்ளது. அப்படியானால் இணைந்த அரசியல் மூலம் ஏதேனும் உரிமை கிடைக்கும் என நம்புவது பொருத்தமாகாது.
இது ஒரு புறம். மறு புறத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கட்டமைப்பை இழந்து போயுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் கூட்டமைப்பு இத்துணை தூரம் உள்ளக முரண் பாட்டை சந்திக்குமென எவரும் எதிர்பார்க்க வில்லை.
எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்துவம் இழந்துவிட்டது. அவர்கள் கூட்டமைப்பு என்ற பெயரொடு மக்கள் முன் தோன்றுவது நயப்பிற்குரியதாகும்.
ஆக, தமிழினம் புதியதோர் தலைமையை – புதிய அரசியல் கட்சியை எதிர்பார்க்கின்றது.
இந்தப் புதிய அரசியல் கட்சி அனைத்து தமிழ் கட்சிகளினதும் தெரிந்தெடுத்த உறுப்பினர்களைக் கொண்டமைந்த தனித்துவமான கட்சியாக இருக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் விருப்பமாகும்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply