முரளிதரனுடன் இணைந்து செயற்படுகிறேன்: சந்திரகாந்தன்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காகத் தானும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் இணைந்து பணியாற்றி வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
ஜனாதிபதி வெற்றிபெற வேண்டுமென் பதே இருவரதும் ஒரே நோக்கமாகுமெனத் தெரிவித்த முதலமைச்சர், இருவருக்கிடையில் பிணக்குகள் நிலவுவதாக வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லையெனத் தெரிவித்தார்.
இருவரும் வெவ்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், ஜனாதிபதித் தேர்தலில், ஒரே நோக்கத்துக்காகப் பாடுபடுவதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது எனத் தெரிவித்த முதலமைச்சர் சந்திரகாந்தன், கடந்த காலங்களில் சில கருத்து முரண்பாடுகள் நிலவியபோதிலும் தற்போது இணைந்தே செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply