அவதார் படத்தில் வரும் பண்டோரா கிரகம் இருக்கிறதா?
‘அவதார்’ படத்தில் வரும், “பண்டோரா’ போன்ற கிரகம் ஒன்று இருந்தால்… அதுவும் நமக்கு அருகிலேயே இருந்தால் எப்படி இருக்கும்? அது போன்ற கிரகம் ஒன்று இருப்பதாக விஞ்ஞானி ஒருவர் கணித்துள்ளார். சமீபத்தில் வெளியான ஹாலிவுட் தயாரிப்பான, “அவதார்’ படத்தில் மனிதன், பூமியில் வாழ்வதற்கான எரிபொருள் தேவைக்காக பூமியைப் போலவே இருக்கும் இன்னொரு கிரகமான, “பண்டோரா’ என்ற கிரகத்தைத் தேடிச் செல்வது போன்ற காட்சிகள், இன்று நமக்கு ஆச்சரியத்தைத் தந்தாலும், இன்னும் சில நூற்றாண்டுகளில் நிஜமாகப் போகிறது என்பது தான் உண்மை என்பதே விஞ்ஞானிகள் கருத்து.
ஹார்வர்டு ஸ்மித் – சோனியன் வானியற்பியல் மையத்தைச் சேர்ந்த லிசா கல்ட்டெனகர் என்ற பெண்மணி, “ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்’ என்ற கருவியின் மூலம் சூரியக் குடும்பத்துக்கு உள்ளேயே பூமியைப் போல அமைப்புடைய ஏதாவது ஒரு கிரகம் இருக்காதா என்று ஆராய்ந்து வருகிறார். “நமது சூரியக் குடும்பத்துக்குள் வியாழன் கிரகம் போன்று அளவில் பெரிய பெரிய வாயு கிரகங்கள் சுற்றி வருகின்றன. இவற்றின் அருகில் பல நட்சத்திரங்களும் இருக்கின்றன. இந்த வாயு கிரகங்களில் நாம் வாழ முடியாது.”ஆனால் இவற்றைச் சுற்றி வரும் நட்சத்திரங்கள், பெரும்பாலும் பாறைகள், பனி மூட்டங்கள் இவற்றோடுதான் இருக்கின்றன. இவை, நாம் வாழ்வதற்குத் தகுதியான கிரகங்கள் மேலும் சில இருக்கின்றன என்பதைத்தான் காட்டுகின்றன’ என்கிறார் லிசா.
இப்போது அவர் இதுபோன்ற மனிதன் வாழத் தகுந்த கிரகமான, “ஆல்பா சென்டவுரி ஏ’ என்பதைக் கண்டுபிடித்துள்ளார். “நமது சூரியன் போல உள்ள ஒரு நட்சத்திரத்தின் அருகில் ஆல்பா கிரகம் இருக்கிறது. “அவதார்’ படத்தில் வரும், “பண்டோரா’ போலத்தான் அது இருக்கிறது. அதில் நமக்குத் தேவையான கார்பன் டை ஆக்சைடு, ஆக்சிஜன், நீர் போன்றவை இருக்கிறதா என்று ஆராய்ச்சி நடந்து வருகிறது’ என்று தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply