கிழக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரை முதலமைச்சர் சந்திப்பு
கடந்த சில வாரங்களாக கிழக்கு மாகாணத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வவுணதீவு உட்பட சில பிரதேசங்களுக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
முதலமைச்சருடன் மாகாண சபை உறுப்பினரான எட்வின் சில்வா கிருஸ்னானந்தராஜா மற்றும் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் ஆகியோரும் அப்பிரதேசங்களுக்கு சென்றிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 87 ஆயிரத்து 736 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் வெள்ள நிவாரணம் பெற தகுதியுடைய சுமார் 40 ஆயிரம் குடும்பங்களுக்கு ஒரு வார காலத்திற்கு ரூபா 245 முதல் 525 வரை உலர் உணவு நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply