திருமலை மாவட்ட மீனவர்களுக்கான பாஸ் நடைமுறை முற்றாக நீக்கம்
திருகோணமலை மாவட்டத்தில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதற்கான பாஸ் நடைமுறை முற்றாக நீக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இந்த நடைமுறை உடனடியாக அமுலுக்குக் கொண்டுவரப்படுகிறதென கிழக்கு மாகாணத்திற்கான கடற்படையின் கொமடோர் எஸ். ஜயக்கொடி இதனை நேற்று அறிவித்தார்.
முதூர், கிண்ணியா, புல்மோட்டை ஆகிய பகுதிகளிலுள்ள மீனவர்களுக்கு நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. நேற்றைய அறிவிப்பின்படி, கடலுக்குச் செல்லும் சகல மீனவர்களும் எவ்வித பாஸ்களையும் எடுக்க வேண்டிய அவசியமில்லை.
இக் கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் மொஹான் ஜயவிக்ரம, அமை ச்சர் நஜீப் ஏ மஜீத், கிழக்கு மாகாண கடற் படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் வீரசேகர, கிழக்கு மாகாண சபை தவிசாளர் கே. எம். எம். பாயிஸ், கிழக்கு மாகாண சபை முதல்வர் எஸ். எல். எம். ஹஸன் அஸ்ஹரி, பிரதேச சபை தவிசாளர் கே. எம். தெளபீக் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இப்பிரதேச மீனவர்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர் கொண்டதை பலதரப் பினரிடமும் விடுக்கப்பட்ட வேண்டுதலின் பேரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
மீனவர்கள் 24 மணித்தியாலமும் கடலில் தொழில்புரிவதற்கு வசதியாக பாஸ் தடையை முற்றுமுழுதாக நீக்குவதோடு மீனவர்களால் முன்பு பெற்ற பாஸ் அனுமதிகளை பாதுகாப்பின் நிமித்தம் மீனவர்கள் வைத்துக் கொள்வது உகந்தது எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு ஏற்படக்கூடிய இடர்பாடுகள் இருப்பின் அவற்றை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளன.
ஜனாதிபதியின் இந்நடவடிக்கை மூலமாக இப்பிரதேச மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதுடன் ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரினதும் நடவடிக்கைக்காகவும் நன்றியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply