வங்கி அட்டை மோசடியில் ஈடுபட்ட இருவர் அவுஸ்திரேலியாவில் கைது; ஆயுதமேந்தி கொள்ளையில் ஈடுபட்ட மூவர் பிரித்தானியாவில் கைது

இலங்கையைப் பிறப்பிடமாகவும் இங்கிலாந்து மற்றும் கனடாவை நிரந்தர வதிவிடமாகவும் கொண்டு சர்வதேச அளவில் வங்கி அட்டை மோசடிகள் பலவற்றில் ஈடுபட்டு வந்த இரு தமிழர்களை அவுஸ்திரேலியப் பொலிசார் கடந்த வாரம் கைது செய்துள்ளனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த 36 வயதுடைய இளங்கோவன் கணேசமூர்த்தி மற்றும் கனடாவைச் சேர்ந்த 31 வயதுடைய ருசாந் செல்வராஜா ஆகிய இருவருமே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்டவர்களாவர்.

மேற்கு அவுஸ்திரேலிய மாநிலமான பேர்த்திலுள்ள சுமார் 20ற்கும் மேற்பட்ட மக்டொனால்ட் உணவு விடுதிகளில் “டிரைவ் இன்” பகுதியால் உள்நுழைந்து பணியாளர் வேறு வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் தருணத்தைப் பார்த்திருந்து தமது மோசடி இயந்திரத்தை அங்கிருக்கும் வங்கி அட்டைகள் மூலம் வியாபார பரிவர்த்தனை செய்யும் இயந்திரத்திற்காகப் பிரதியீடு செய்த இவர்கள், “புளூ ரூத்” பொறிமுறை மூலம் தமது மோசடி இயந்திரத்தில் உரசப்படும் வங்கி அட்டைகள் மற்றும் அவற்றின் இரகசிய இலக்கங்கள் போன்ற விவரங்களை தமது பிரத்தியேகக் கணினிக்கு தரவிறக்கம் செய்துவிடுகிறார்கள்.

இவ்வாறு தரவிறக்கம் செய்யப்படும் வங்கி அட்டைகள் மற்றும் அவற்றின் இரகசிய இலக்கங்கள் போன்ற விவரங்களை பாவித்து போலியான வங்கி அட்டைகளை தயாரிக்கின்றனர். பின்னர் போலியான வங்கி அட்டைகளைக் கொண்டு உலகெங்குமுள்ள “ஏ.ரி.எம்” இயந்திரங்களினூடாகப் பெருமளவு பணம் எடுத்துள்ளனர். இவ்வாறு எடுக்கப்பட்ட பணத்தின் அளவு சுமார் 5 மில்லியன் அவுஸ்த்திரேலிய டாலர்களைத் தாண்டும் தெரிவிக்கப்படுகிறது.

ஆயுதமேந்தி கொள்ளையில் ஈடுபட்ட மூவர் பிரித்தாவியாவில் கைது

இங்கிலாந்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆயுத முனையில் குறித்த கொள்ளை முயற்சி இடம்பெற்றுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நோத்காம்டன், டஸ்டன் பகுதில் உள்ள மொத்த வர்த்த நிலையம் ஒன்றில் பணத்தைப் கொள்ளையடிக்க முற்பட்ட 3 இலங்கையரை பொலிசார் M1 அதிவேகச் சாலையில் வைத்து கைது செய்துள்ளனர். லாட்ஜ் பாம் தொழில் மையத்தில் அமைந்துள்ள பல்பொருள் மொத்த வாணிப நிலையம் ஒன்றிற்குள் புகுந்த 3 இலங்கையர்கள், அங்கு வேலை செய்யும் மனேஜரை பயமுறுத்தி, கஜானாவைத் திறக்க முற்பட்டுள்ளனர். ஆனால் அங்கிருந்த பாதுகாப்புப் பெட்டி நேரக் கட்டுப்பாட்டில் இயங்குவதால் அவர்களால் அதை வேகமாகத் திறக்கமுடியவில்லை.
இந்தக் கொள்ளை முயற்சியின் போது பணம் களவாடப்படவில்லை எனவும், காசாளரின் கையடக்கத் தொலைபேசி மட்டுமே களவாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறை ஹெலிகொப்டர்களின் உதவியுடன் தப்பிச் சென்ற இலங்கையர்கள் மூவரும் M1 அதிவேகச் சாலையில் 15ஏ சந்திக் அண்மையில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply