அமைச்சர் சந்திரசேகரன் மாரடைப்பால் மரணம்: 16/04/1957 – 01/01/2010
சமூக அநீதி ஒழிப்புத்துறை அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான பெரியசாமி சந்திரசேகரன் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அமைச்சரை உடனடியாக கொழும்பின் நவலோக்க வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்ற போதும், சிகிச்சை பலனின்றி அவர் மரணமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறக்கும் போது அவருக்கு வயது 52 .
1957 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி பிறந்த சந்திரசேகரன், முதன்முதலாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூலம் அரசியலுக்கு பிரவேசித்தார். ஆயினும் இ.தொ.கா தலைமையுடன் முரண்பட்டுக் கொண்டு மலையக மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார்.
மலையகத்தில் முக்கிய அரசியல் கட்சியாக வளர்ச்சி பெற்று வந்த மலையக மக்கள் முன்னணி இவரது மறைவினால் பெரும் சவால்களை எதிர்நோக்கும் என்று கருதப்படுகிறது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இவர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply