யாழ். பத்திரிக்கை ஒன்றின் செய்திக்கு முஸ்லிம்கள் கடும் அதிருப்தி

பத்திரிகை செய்தி ஒன்று தொடர்பில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நாளேட்டில் முஸ்லிம் மக்களையும், முஸ்லிம் வர்த்தகர்களையும் பாதிக்கும் போலியான செய்தி வெளியிடப்பட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

போலியான செய்தியை வெளியிட்ட குறித்த நாளேட்டை தீயிட்டு கொளுத்தி யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பத்திரிகை செய்திக்கு யாழ்ப்பாண பள்ளிவாசல் நிர்வாகமும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாண வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் நாய் இறைச்சி உணவாக பரிமாறப்பட்டுள்ளதென குறித்த நாளேட்டில் செய்தி வெளியிடப்பட்டிருந்ததாகவும், இந்த செய்தி உண்மைக்குப் புறம்பானது எனவும் முஸ்லிம்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply