ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்ச்சி நிரலில் “உதயன்” மற்றும் “சுடர் ஒளி’

“உதயன்”, “சுடர் ஒளி’ ஆகிய இரு பத்திரிகைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்ச்சி நிரலில் இயங்குவதாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் எம். கே. சிவாஜிலிங்கம் ‘தேசம்` பத்திரிகை லண்டனில் ஒழுங்கு செய்த கேள்வி நேரம் நிகழ்ச்சியில் பங்கு பற்றி உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

இந்தப் பத்திரிகைகளின் ஆசிரியரான வித்தியாதரனின் மைத்துனரும், இப்பத்திரிகைகளின் நிர்வாக இயக்குநருமான சரவணபவனுக்குக் கொழும்பு மாவட்டத்தில் ஐ.தே.கட்சி சார்பில் போட்டியிட்டு அமைச்சராக வர ஆசை என்றும், ஆனால் தாம் உயிருடன் இருக்கும் வரை அதற்குத் தாம் இடைஞ்சலாக இருப்பார் என்பதை அவர்கள் நினைவில் வைத்திருக்கவேண்டும் என்றும் சிவாஜிலிங்கம் கூறினார்.

ரி. சோதிலிங்கம் என்பவர் இந்நிகழ்வில் சிவாஜிலிங்கத்திடம், புலிகளின் ஆதரவாளர்களும், புலிகளின் முன்னாள் தலைவர்களும் இங்கே (லண்டனில்) இருந்துகொண்டு மேற்குலகின் ஆதரவுடன் சரத்தை ஆதரிக்கிறார்கள், மஹிந்தவை வீழ்த்தலாம் எனச் செயற்படுகின்றார்கள் என்றெல்லாம் கருத்துள்ளது. மேலும் யாழ்ப்பாணத்தில் “உதயன்’, கொழும்பில் “சுடர் ஒளி’ ஆகியன ஐ.தே.கட்சியை ஆதரிக்கின்றன என்று கூறப்படுகின்றதே, இவை பற்றி உங்கள் கருத்து என்னவெனக் கேட்டார்.

அக்கேள்விக்குப் பதிலளிக்கையில், “உதயன்’, “சுடர்ஒளி’ பத்திரிகைகள் கட்சிப் பத்திரிகைகளை மீறிய அளவில் கடுமையாக விமர்சனங்களையும் வார்த்தைப் பிரயோகங்களையும் செய்கின்றன. அவர்கள் ஐ.தே.கட்சியின் நிகழ்ச்சி நிரலில் இருப்பவர்கள் என்று உங்களுக்கே தெரியும். வித்தியாதரனின் மைத்துனர் சரவணபவன் அடுத்த முறை கொழும்பு மாவட்டத்தில் ஐ.தே.கட்சியில் போட்டியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவருக்கு அமைச்சராக வர ஆசை. அதில் தவறு இல்லை. ஆனால் நாம் உயிருடன் இருக்கும்வரை அவர்களுக்கு இடைஞ்சலாக இருப்போம் என்பதை அவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டுமென சிவாஜிலிங்கம் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply