காத்தான்குடி சாகித்திய விழாவில் ‘ஸம் ஸம்’ நூல் வெளியீடு; கலைஞர்கள் கெளரவிப்பு
காத்தான்குடி பிரதேச கலாசார சாகித்திய விழா பிரதேச செயலாளரும் பிரதேச கலாசார பேரவையின் தலைவருமான எஸ். எச். முஸம்மில் தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லா இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் ‘ஸம் ஸம்’ எனும் சிறப்பு மலரொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், நாடகம், மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இவ்விழாவில் எட்டு கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
நாடகத் துறைக்கு யு. எல். எம். என். முபீன், ஓவியம் ஏ. எல். ஏ. எம். இப்றாகீம், அறிவிப்பாளர் ஐ. ஜுனைதீன், ஊடகம் மெளலவி எஸ். எம். எம். முஸ்தபா, சிறுகதை ஜனாபா பரீதா ஷாஹுல் ஹமீட், கவிதை மெளலவி எச். எம். எம். இப்றாகீம் (நத்வீ), கிராமிய கலை எம். எல். ஏ. எம். முஸ்தபா, கவிதை எம். ஐ. எம். முஸ்தபா ஆகிய எட்டு கலைஞர்களும் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ் என்பன வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.
வில்லிசை புகழ் எம். சீ. எம். முஸ்தபா ஆசிரியரின் நாடகமும் இவ்விழாவில் நடைபெற்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply