வேகமாக அழிந்து வரும் புலிகள்
உலகில் வேகமாக அழிந்து வரும் இனங்களில், புலி இனம் முதல் இடத்தையும், துருவக் கரடி இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன. இது குறித்து, ’உலக வன நிதியம்’ நிர்வாகி கூறியதாவது; உலகில் அதிகளவு அழிந்து வரும் இனங்களில், முதல் இடத்தை புலியினம் பிடித்துள்ளது. தற்போது 3,200 புலிகள் மட்டுமே, உயிர் வாழ்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகில் பத்து உயிர் வாழ் இனங்கள், வேகமாக அழிந்து வருவதாகவும், அதில் முதல் இடம் புலி இனம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 100 ஆண்டுகளில், புலிகளின் எண்ணிக்கை 95 சதவீதம் குறைந்துள்ளதாகவும், இதற்கு அடுத்த இடத்தில் துருவக் கரடிகள் இடம் பெற்றுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply