ஏ-9 வீதியை இனி 24 மணி நேரமும் பயன்படுத்தலாம்
இன்று நள்ளிரவு முதல் ஏ-9 ஊடாக வீதித் தடை முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் அறிவித்துள்ளார். இதன்படி இன்று நள்ளிரவு முதல் சகல வாகனங்களும் பொதுமக்களும் எவ்வித அனுமதியும் பெறாமல் 24 மணி நேரமும் ஏ-9 வீதியூடாக பயணங்களை மேற்கொள்ளலாம் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் 10ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் போது உயர்பாதுகாப்புவலய நீக்குதல்கள் பற்றிய அறிவித்தலையும் வெளியிடுவார் என பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply