ஆழ ஊடுருவும் அணியின் தளபதி பலி, இருப்பினும் படையணி சடலத்துடன் தளம் திரும்பியது : த நேசன்

கடந்த வாரம், ஒட்டுசுட்டான் பகுதியில் புலிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெயசிங்க கொல்லப்பட்டுள்ளார். இது தொடர்பாக ‘நேசன்’ ஆங்கில வார இதழ் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இராணுவத்தின் சிறப்பு படையணியான ஆழ ஊடுருவும் படையணி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊடுருவி புலிகளின் இராணுவ இலக்குகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருவது உண்டு. இந்நிலையில் கடந்த வாரம் ஒட்டுசுட்டான் பகுதியில் தாக்குதல் நடத்துவதற்கு எட்டுப் பேர் கொண்ட அணி ஊடுருவிய போது விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அதன் கட்டளைத் தளபதி மேஜர் லலித் ஜெயசிங்க கொல்லப்பட்டுள்ளார்.

புலிகளின் தீவிரமான கண்காணிப்பில் உள்ள ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் மக்கள் செறிவாக வாழ்கின்றனர். தொடர்ந்த மழையும் மிக மோசமான காலநிலையில் புலிகளின் இராணுவ இலக்கு ஒன்றைத் தாக்குதவற்கு இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணி பதுங்கியிருந்த போது புலிகளின் அணி சடுதியாக தாக்குதலை நடத்தியது. தாக்குதலில் காயமடைந்த கட்டளைத் தளபதியை சக படையினர் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளிக்க முற்பட்ட போது புலிகள் மீண்டும் தாக்குதலை நடத்தியதால் ஜெயசிங்க பலியானதுடன் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், புலிகளின் தாக்குதலை முறியடித்து, இறந்த ஜெயசிங்காவின் சடலத்துடன் மற்றும் காயமடைந்த படைத்தரப்பைச் சேர்ந்தவரையும் தம்முடன் எடுத்துக்கொண்டு மற்றைய ஆறு இராணுவத்தினரும் தமது தளங்களுக்கு திரும்பியுள்ளதாக அவ்வார இதழ் மேலும் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply