‘நம்பிக்கைமிக்க மாற்றம்’ – சரத் பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனம்

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனம், ‘நம்பிக்கைமிக்க மாற்றம்’ என்ற தொனிப் பொருளில் 10 பிரதான அம்சங்களை உள்ளடக்கியதாக இன்று முற்பகல் கொழும்பு இன்டர் கொன்டினெண்டல் ஹோட்டலில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

ஜெனரல் பொன்சேகாவை ஆதரிக்கும் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

01. ஜனநாயகத்தை மீளக் கட்டியெழுப்பி சமாதானத்தை முறையாகப் பேணல்
02. ஊழல்,விரயங்களை முற்றாக இல்லாதொழித்தல்
03. நெருக்கமான உறவுகளைப் பேணி அனைத்து குடும்பங்களுக்கும் தேவையானவற்றை செய்தல்
04. வாழ்க்கைச் செலவை குறைத்தல்
05. நாட்டின் ஒற்றுமையைக் கட்டியெழுப்புதல்
06. சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தல்
07. பெண்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் கௌரவமான நிலைமையைத் தோற்றுவித்தல்
08. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுத்தல்
09. காத்திரமானதும் வினைத்திறன் மிக்கதுமான சமுதாயத்தைக் கட்டியெழுப்ப அடித்தளம் அமைத்தல்
10. நாட்டின் தேசிய பாதுகாப்பை நிலைநிறுத்தல்

மேற்கண்ட 10 அம்சங்களையும் அவற்றுக்கான விளங்கங்களையும் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளதுடன் ஜனாதிபதியாகத் தாம் தெரிவு செய்யப்பட்டால் நாட்டில் துரித மாற்றத்தை ஏற்படுத்த மேற்கொள்ளவுள்ள 7 படிமுறைகள் குறித்தும் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply