சென்னையில் புலிகளாக இருக்கலாமென சந்தேகத்தில் 6 பேர் கைது
சென்னை தனியார் விடுதி ஒன்றில், போலி ஆவணங்களுடன் தங்கியிருந்த 6 இலங்கைத் தமிழர்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் விடுதலைப் புலிகளா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று, ஜாம்பஜார் சுபத்ரா தெருவில் உள்ள விடுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அங்குள்ள ஒவ்வொரு அறையாக சென்று தங்கி இருந்தவர்களிடம் ஊர், பெயர், தங்கியிருப்பதற்கான காரணம், எவ்வளவு நாட்கள் தங்கி உள்ளனர் என்பன போன்ற விபரங்களை கேட்டு அறிந்தனர்.
அப்போது விடுதியில் உள்ள 2 அறைகளில் தலா 3 பேர் வீதம் மொத்தம் 6 இலங்கை தமிழர்கள் தங்கியிருந்தனர். விசாரணையில், அவர்கள் 6 பேரும் சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்ததும், விசாக் காலம் முடிந்தும் இங்கு தொடர்ந்து தங்கியிருப்பதும் தெரிய வந்தது. இவர்கள், வேளச்சேரி, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தங்களது பெயர், விவரங்களைப் பதிவு செய்துள்ளனர். விசா காலம் முடிந்ததும் நாடு திரும்பியது போல் தெரிய வேண்டும் என்பதற்காக அங்கிருந்து புறப்பட்டு ஜாம்பஜார் விடுதிகளில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடமிருந்து போலியான ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். வேலை விஷயமாக லண்டன் செல்வதற்காக இந்தியா வந்தோம் என குறிப்பிட்ட அவர்களின் பதில் போலீசாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. 6 பேரும் புலிகளாக இருக்கலாம் என சந்தேகித்தனர். இதையடுத்து கியூ பிராஞ்ச் மற்றும் உளவுப்பிரிவு போலீசுக்கு தகவல் கொடுத்தார்கள். இதையடுத்து இரு பிரிவு போலீஸாரும் கிட்டத்தட்ட 14 மணி நேரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஆறு பேரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply