வேலுப்பிள்ளையின் இறுதிக் கிரியையில் தொல் திருமாவளவன்
பிரபாகரனின் தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் தகனக் கிரியைகள் நாளை வல்வெட்டித்துறையில் நடைபெறவிருக்கின்றன. அதில் கலந்து கொள்ள தமிழகத்தில் இருந்து தொல் திருமாவளவன் கொழும்பு வந்துள்ளதாக தெரியவருகிறது. அவருடன் இன்னும் இரு தமிழக பிரமுகர்களும் இறுதிக் கிரியையில் கலந்து கொள்ள வல்வெட்டித்துறைக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
காலஞ்சென்ற திருவேங்கடம் வேலுப்பிள்ளையுடன் பனாகொடை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவரது மனைவி பார்வதி வேலுப்பிள்ளையும் நேற்று விடுதலை செய்யப்பட்டார். திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடலுடன் இவரையும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பொறுப்பேற்று நேற்றிரவு யாழ்ப்பாணம் சென்றடைந்துள்ளார்.
வேலுப்பிள்ளையின் மரணம் தொடர்பாக மரண விசாரனை நடைபெற வேண்டும் எனத் தான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மரண விசாரனை நடைபெற்றதாகவும், பிரேதப் பரிசோதனை நடைபெற்று, சட்ட வைத்திய அறிக்கையின்படி இயற்கை மரணம் என்ற சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
அதேவேளை அன்னாருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இன்று யாழ்ப்பாணம் சென்றடைந்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply