மும்பாய் தாக்குதலால் இலங்கையின் உல்லாசப் பயணத்துறைக்குப் பாதிப்பு?
இந்தியாவின் மும்பாயிலுள்ள ஐந்து நட்சத்திர விடுதிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சி ஏற்படலாமென இலங்கை உல்லாச விடுதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்கனவே இலங்கையிலுள்ள பல்வேறு விடுதிகளில் மேற்கொள்ளப்பட்டிருந்த பதிவுகள் இரத்துச்செய்யப்பட்டு விட்டதாக அந்தச் சங்கம் கூறியுள்ளது. தற்பொழுது மும்பாய் உல்லாசவிடுதிகளில் நடந்திருக்கும் தாக்குதல்கள் இலங்கையிலும் உல்லாசப் பயணத்துறை மேலும் பாதிக்கப்பட்டுள்ளது என இலங்கை உல்லாச விடுதிகள் சங்கத்தின் தலைவர் சிறிலால் மித்தபால கூறினார்.
எனினும், இந்தியாவில் நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் இலங்கையின் உல்லாசப் பயணத்துறையை ஊக்குவிக்கும் எனச் சிலர் கூறுகின்றனர். ஆனால், உண்மை அவ்வாறு இல்லை. நிச்சயமாக இந்தத் தாக்குதல்கள் உல்லாசப் பயணத்துறையைப் பாதிக்கும். இதுவரை, முற்கூட்டிய பதிவுகள் எமக்குக் கிடைக்கவில்லை” என அவர் தெரிவித்தார்.
உள்நாட்டில் தொடர்ந்துவரும் மோதல்கள், உலகளாவிய ரீதியில் தோன்றியிருக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் தற்பொழுது மும்பாயில் நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல்கள் ஆகிய முன்று முக்கிய காரணிகளால் இலங்கையின் உல்லாசத்துறை பின்னடைவுகளைச் சந்தித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மும்பாய் தாக்குதல்களைத் தொடர்ந்து தாம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், உல்லாச விடுதிகளின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதிமொழி வழங்கியதாகவும் மித்தபால கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply