பொன்சேகாவை ஆதரித்து கூட்டமைப்பு வவுனியாவில் தேர்தல் பிரச்சாரம்
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் எதிரணி கட்சிகளின் கூட்டமைப்பு வேட்பாளராகிய சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென முடிவு செய்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வவுனியா பிரதேசத்திற்கான தனது முதலாவது பரப்புரையை இன்று ஆரம்பித்திருக்கின்றது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
தமது முடிவு எவ்வாறு எடுக்கப்பட்டது என்பது குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் நீண்ட உரையின் மூலம் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் விளக்கமளித்ததன் பின்னர் சரத் பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், வினோ நோகராதலிங்கம் ஆகியோர், இன்றைய அரசியல் சூழலில் ஆட்சி மாற்றம் ஒன்று அவசியமாகியுள்ளது எனவும், இதற்காகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பலருடைய கருத்துக்களுக்கமையவே எடுக்கப்பட்டது என்றும் கூறுகின்றனர்.
இதுபற்றிய மேலதிகத் தகவல்களை இன்றைய பிபிசி தமிழோசை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply