மேல்மாகாணத்தின் பாதுகாப்புக்கு 800 பேர்கொண்ட விசேட படைப் பிரிவு
மேல்மாகாணத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், பயங்கரவாதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவதற்கும் 800 பேர்கொண்ட விசேட செயற்பாட்டுப் பிரிவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமால் லியூகே தலைமையில் இந்த விசேட செயற்பாட்டுப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு முந்தலம, நீர்கொழும்பு, வெதமுலன, கொழும்பு, மருதானை மற்றும் பம்பலப்பிட்டி ஆகிய பகுதிகளில் தமது பணிகளை ஆரம்பித்துள்ளது.
மேல்மாகாணத்திலுள்ள பதிவுசெய்யப்படாத தற்காலிக விடுதிகள் விசேட செயற்பாட்டுப் பிரிவினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரியவருகிறது. குறிப்பாக கொட்டாஞ்சேனைப் பகுதியிலுள்ள பல விடுதிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவிட்டு பொலிஸாரின் சட்டநடவடிக்கைகளிலிருந்து தப்பி மறைந்திருப்பவர்களைக் கண்டுபிடிப்பதும் இந்த விசேடட செயற்பாட்டுப் பிரிவின் கடமையெனத் தெரிவிக்கப்படுகிறது.
களனி பாலத்துக்கு பாதுகாப்பு வழங்கிவந்த பொலிஸார் நீக்கப்பட்டு, களனி பாலத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு விசேட செயற்பாட்டுப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது. முக்கிய 9 பாலங்கள் உட்பட நகரப் பகுதியின் முக்கிய இடங்களின் பாதுகாப்பு விசேட செயற்பாட்டுப் பிரிவினரின் பாதுகாப்பின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
விசேட கொமாண்டோ பயிற்சிகளைப் பெற்ற விசேட அதிரடிப்படையினர் இந்த விசேட செயற்பாட்டுக் குழுவில் இணைக்கப்பட்டிருப்பதுடன், இவர்கள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமால் லியூகேவின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் செயற்படுவார்கள் எனத் தெரியருகிறது. இவர்களுக்குத் தனியான சீருடையும் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களில் ரோந்துசெல்லும் விசேட அதிரடிப்படையினர் வீதிகளில் நடந்து செல்பவர்களை சோதனைக்கு உட்படுத்திவருகின்றனர்.
குறிப்பாக தமிழர்கள் பொலிஸ் பதிவு, ஆளடையாள அட்டையைக் காண்பித்தாலும் விசேட அதிரடிப்படையினரால் நீண்டநேரம் விசாரிக்கப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply