லங்காபேலியின் கைதுக்கு இடதுசாரி முன்னணி வன்மையான கண்டனம்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிநிகழ்வில் அஞ்சலி உரையாற்றிய இடது சாரி முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் தர்மசிறி லங்காபேலி வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கை வருமாறு,
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் அஞ்சலி நிகழ்ச்சி வல்வெட்டித் துறையில் நடைபெற்றபோது, இந்த நிகழ்ச்சியில் இரங்கல் உரையை இடதுசாரி முன்னணி சார்பில் அரசியல் குழு உறுப்பினர் தர்மசிறி லங்காபேலி உரையாற்றிக் கொண்டு இருக்கையில், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திடீரென அவ்விடத்திற்கு வந்து ஒலி பெருக்கி இணைப்பைத் துண்டித்ததோடு, சிங்கள பேச்சாளர்கள் இங்கு பேசக் கூடாது என தடைவிதித்ததோடு, லங்காபேலியை கைது செய்து மக்களுக்கு உணர்சசியை தூண்டும் விதத்தில் பேசினார் என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஒரு மரண வைபவத்தை கூட மகிந்த ராஜபக்ஷஅரசாங்கம் நடத்துவதற்கு அனுமதி அளிக்காத நிலை காணப்படுகிறது. மேற்படி மரண வைபவத்தில் பொலிஸ் அதிகாரி நடந்துகொண்ட விதம் கண்டிக்கப்பட வேண் டும்.
பொலிஸார் சட்டத்தை கையில் எடுத்து மனம் போன போக்கில் நடக்கின்றார்கள். தேர்தல் காலத்தில் இந்நிலை என்றால் சாதாரண நாட்களில் இவர்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை ஊகிக்க முடியும்.எனவே இந்த விடயம் தொடர்பாக யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டும் எது வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதே நேரத்தில் வல்வெட்டித்துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு பல தடவை தொடர்பை ஏற்படுத்தியும் தொடர்பு துண்டிக்கப்பட்டது. எனவே இந்த விடயம் தொடர்பாக இடதுசாரி முன்னணி தனது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறது என்றுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply