உண்மையை கொட்டினார் சரத்தின் ஒக்லஹோமா நண்பர்

சரத் பொன்சேகாவின் மருமகன் நடத்திவந்த ஹைகோப் சர்வதேச நிறுவனம் ஆயுதக் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டது என்பதை பொன்சேகாவின் நீண்டகால குடும்ப நண்பனும் அமெரிக்க ஒக்லஹோமா மாநிலத்தில் வசிப்பவருமான ஓய்வுபெற்ற இராணுவ கப்ரன் உபுல் இளங்கம்கே உறுதி செய்தார்.

இந்த நிறுவனம் போலி ஆவணங்களை சமர்ப்பித்து பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனம் என்பதையும் அவர் ஆதாரபூர்வமான ஆவணங்களுடன் நிருபித்தார்.

கொழும்பு கலதாரி ஹோட்டலில் நேற்றுக்காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச ஆகியோர் கலந்து கொண்டனர். உபுல் இளங்கம்கே மேலும் உரை யாற்றுகையில், சரத் பொன்சேகா தொடர்பில் சகல ஆவணங்களையும் நான் சமர்ப்பித்துள்ளேன். இவற்றில் உண்மையில்லை என்று சரத் பொன்சேகாவால் கூறமுடியாது. அவ்வாறு கூறுவாராயின் அதனை நிரூபிக்குமாறு நான் சவால் விடுக்கிறேன் என்றார்.

பிரிட்டிஷ் போனியோ டிபென்ஸ் நிறுவனத்தின் உள்ளூர் முகவர் என்ற ரீதியிலேயே ஹைக்கோப் பதிவு செய்யப்பட் டுள்ளது. இந்த பதிவுக்காக உபுல் இளங் கம்கே என்று தனது கையொப்பம் மோசடியாக பாவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதற்கு எதிராக ஹைக் கோப் நிறுவனத்தில் தனுன திலகரத்ன, ருவிந்த குணரத்ன ஆகியோருக்கு எதிராக ஏற்கனவே அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த வழக்கு தொடர்பாக தனுன திலகரத்ன, ருவிந்து குணரத்ன ஆகியோருக்கு எதிராக ஒக்ல ஹோமா மாநில நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜனவரி 13 ஆம் திகதிக்கு முன்னர் இந்தத் குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்திற்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. தனக்கு மேலும் 20 நாட்கள் கால அவகாசம் வழங்குமாறு தனுன திலகரத்ன நீதிமன்றத்திடம் கேட்டுள்ளார்.

இவ்வாறு கால அவகாசம் கோரப்பட்டுள்ளதாவது, சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த போது அவரது செல்வாக்கை பயன்படுத்தி இலங்கை இராணுவத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஆயுதக் கொள்வனவு தொடர்பான வங்கி கணக்கு வழங்குகளை மூடிமறைப்பதற்கே என்றும் அவர் வலியுறுத்தினார்.

தனுன, ருவிந்து ஆகியோர் வர்த்தக நடவடிக்கைகளை தொடர்வதற்கு முன்பே எனக்கு நன்கு அறிமுகமானவர்கள் ஹைக்கோப் நிறுவனத்தைத் தொடங்குவதற்காக பொன்சேகாவுடன் நடத்திய கலந்துரையாடல் பற்றியும் எனக்குத் தெரியும்.

தனது பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் நாட்டுக்கு எதிராக செயற்படுகின்ற காரணத்தால் பொன்சேகாவின் மறுபக்கம் குறித்தும் பகிரங்கப்படுத்த வேண்டியது அவசியம் என்றார்.

தானும், சரத் பொன்சேகா குடும்பத்தினர் களும் கடந்த 35 ஆண்டுகளாக நெருக்கமான நண்பர்கள் என்று தெரிவித்த அவர் பொன்சேகா குறித்து தன்னைவிட நன்கு அறிந்தவர்கள் எவரும் இருக்க முடியாது என்றார்.

2000 ஆம் ஆண்டில் சரத் பொன்சேகாவும் குடும்பத்தவர்களும் அமெரிக்க ஒக்லஹோ மாவில் வதிவிட வசதிகளை பெறுவதற் குத்தான் உதவி புரிந்ததாக தெரிவித்த அவர், தான் வழங்கிய பங்களிப்பு காரணமாக சரத் பொன்சேகாவின் இரு மகள் மாரும் அமெரிக்காவில் தொடர்ந்து கல்வி பயிலும் வாய்ப்பு கிட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply