வன்னி மக்களின் பொருட்கள் களவு போவதாக குற்றச்சாட்டு

இலங்கையின் வடக்கே வன்னிப் பகுதியில் போர் இடம் பெற்ற காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர ஏற்பட்ட நிலையில், அப்போது அவர்கள் விட்டுச் சென்ற வாகனங்கள் மற்றும் பல பொருட்களை இலங்கையின் அரச படையினர் களவாடியுள்ளதாக உள்ளூர் மக்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்திலும் தான் எழுப்பியுள்ளதாகக் கூறும் சிவசக்தி ஆனந்தன் அவர்கள், ஆனால் அரச தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறுகிறார்.

ஆனால் இலங்கையின் அரச படைகள் அப்படியான எந்தச் செயல்களிலும் ஈடுபடவில்லை என்றும், போர் காலத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களும் கணக்கில் வைக்கப்பட்டு பட்டியிலிடப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறுகிறார்.

இப்படியான குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், இராணுவத்துக்கு தேவையான அனைத்து பொருட்கள் தங்களிடம் உள்ளது என்றும் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply