ஜனாதிபதியின் வெற்றி உறுதியாகிவிட்டது: கிழக்கு முதல்வர்

எதிர்வரும் 26ம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது என கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திர காந்தன் தெரித்தார்.

அன்மையில் மட்டக்களப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரித்து இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரை நிகழ்த்தும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த காலங்களைப்போல் அல்லாது மிகவும் அனைவராலும் எதிர்பார்க்கக்கூடிய இருமுனை போட்டி நிறைந்த ஓர் தேர்தலாக இது அமைந்திருக்கின்றது.

நாட்டின் தலைவரை தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ் பேசும் மக்களின் வாக்குகளே செல்வாக்கு செலுத்துகின்றது. கிழக்கு மாகாணத்திலே இருக்கின்ற அனைத்து மக்களுமே மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவினை வழங்குவார்கள்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்து வாக்காளர்களும்; தமது முழு ஆதரவினையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கே வழங்குவதனூடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply