அரச ஊடகங்களிடம் சரத் பொன்சேகா 2000 மில்லியன் நட்டஈடு கோரல்

2000 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி ஜெனரல் சரத் பொன்சேகா அரச ஊடக நிறுவனங்களுக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையிலான பத்திரிகை செய்திகளை அரச ஊடகங்கள் பிரசூரம் செய்துள்ளதாகவும், இதனால் தமது நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லேக் ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தின் சண்டே ஒப்சர்வர் மற்றும் சிலுமின ஆகிய பத்திரிகைகளிடமிருந்து ஜெனரல் சரத் பொன்சேகா நட்டஈடு கோரியுள்ளார்.

போல் ரட்நாயகக்க அசோசியேட்ஸ் சட்ட நிறுவனத்தின் ஊடாக இந்த நிபந்தனைகள் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் 10ம் திகதி குறித்த பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் மூலம் இலங்கை மக்கள் பிழையான வழியில் நடத்தப்பட்டுள்ளதாகவும், தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு பத்திரிகைகளும் தலா ஒரு பில்லியன் ரூபா நட்ட ஈடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply