புலிகளுக்காக ஆயுத கொள்வனவு செய்த முயன்ற இரு கனேடிய தமிழர்களுக்கு அமெரிக்காவில் ஆயுள் தண்டனை
விடுதலைப் புலிகளுக்காக ஆயுத கொள்வனவு செய்த முயன்ற இரு கனேடிய தமிழர்களுக்கு அமெரிக்க நீதிமன்றம் 25 வருட ஆயுள் தண்டனை வழங்கவுள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்பாக எவ்.பி.ஐ. அதிகாரிகளினால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்காவில் ஸ்ரிங்கர் 10 SA-18 வெப்ப உறிஞ்சி விமான எதிர்ப்பு ஏவுகணையினை கொள்வனவு செய்ய முயற்சித்ததாக இரு கனேடிய தமிழர்களான சுகி சபாரட்னம், திருத்தணிகன் தணிகாசலம் ஆகியோரே இவ்வாறு தண்டனை பெற்றுள்ளனர்.
ஆகஸ்ட் 19, 2006ல் வின்னி என்ற ஆயுத தரகரிடம் இந்த இருவரும் ஆயுத பேரத்தில் ஈடுபட்டனர். ஆயுத தரகருடன் சென்று ஸ்ரிங்கர் ஏவுகணைகளையும் பார்வையிட்டு அதற்கான கொடுப்பனவுகளை கொடுத்த பின்னர் இவர்களை எவ்.பி.ஐ.யினர் கைது செய்தனர். அத்துடன் இவர்கள் விடுதலைப் புலிகளுடன் இலங்கையில் தொடர்பு கொண்டு ஸ்ரிங்கர் ஏவுகணை தொடர்பாக தொலைபேசியில் உரையாடியதனையும் ஆதாரமாக கொண்டே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுடன் ஆயுதத் தரகராக பேரத்தில் ஈடுபட்ட வின்னி என்பவர் எவ்.பி.ஐயின் ஏஜென்ட் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply