இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையை இந்தியா வகுக்க வேண்டும்-இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
இலங்கையில் சிங்களவர்கள் தோன்றுவதற்கு முன்பதாகவே தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இந்த உண்மையை சிங்கள ஆய்வாளர்களே வெளியிட்டுள்ளனர்.
ஆகவே இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையை இந்தியாவே வகுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரன்.
திருச்சியில் நேற்று நடைபெற்ற இலங்கைப் பிரச்சினை-சிக்கலும் தீர்வும் என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் வசித்து வரும் தமிழர்களை சிங்கள அரசாங்கங்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாகவே கருதுகின்றனர். இது ஏள் என்பதுதான் கேள்வி?
ஆயுதம் தாங்கிய போராட்டம் அண்மையில் தோன்றிய ஒன்றல்ல. தமிழர்களின் 60 ஆண்டு கால போராட்டத்தில் முதல் 35 ஆண்டு காலம் அவர்கள் ஆயுதத்தைத் தூக்கவில்லை.
ஈழத்தின் தந்தை என்றழைக்கப்படும் தந்தை செல்வா அற வழியில் போராட்டம் நடத்தியபோதும் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினர். அதன் பிறகுதான் ஆயுதப் போராட்டம் ஆரம்பமானது.
ஒரு காலத்தில் பிரபாகரனால் தாக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுபவர்களும் சேர்ந்துதான் இப்போது தமிழ் எம்பிக்கள் 22 பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறார்கள். 20 ஆண்டுகள் காலமாக ஒரு போராளிகள் குழுப் பொறுப்பை வகித்த பிரபாகரன் பல அனுபவங்களை இப்போது பெற்றிருக்க மாட்டாரா?
ஆயுதத்தைக் கீழே போட்டுவிட்டு பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும் என்கிறார்கள். அதற்கும் புலிகள் தயாரானார்கள். ஆனால் இலங்கை அரசாங்கம் அதனை ஏற்கவில்லை.
மும்பையில் நடைபெற்றது பயங்கராவாதமா? இலங்கைத் தமிழர்கள் நடத்தி வருவது பயங்கரவாதமா?
முதலில் இலங்கை அரசாங்கம் யுத்தத்தை நிறுத்த வேண்டும். அதன் பிறகு தமிழர்களுக்கான உரிமைகள் குறித்து இலங்கை அரசு முன்மொழிவுகளை அறிவிக்க வேண்டும். எனத் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply