யாழ். வலிகாமம் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் மீள்குடியேற அனுமதி

இலங்கையின் வடக்கே யாழ் குடநாட்டின் வலிகாமம் அதியுயர் பாதுகாப்பு வலயமாகத்தில் 20 வருடங்களின் பின்னர் மீள்குடியேறுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருக்கின்றது.

இந்தப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த சுமார் ஆயிரம் பேரை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தினுள் முதன் முறையாக அழைத்துச் சென்றுள்ளார்கள்.

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள்ளே மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயம் வரையிலும், அங்கிருந்து மேற்குத் திசையில் கீரிமலை மற்றும் சேந்தாங்குளம் வரையிலும் பொதுமக்கள் வாகனங்களில் சென்று தமது காணிகள் இடங்களைப் பார்வையிடலாம் என்றும், இவ்வாறு செல்பவர்கள் இராணுவத்தினரால் சோதனையிடப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மூன்று தினங்களில் சொந்த காணிகளைத் துப்பரவு செய்யும் பணிகளை இடம்பெயர்ந்த மக்கள் ஆரம்பிப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

எனினும் இந்தப் பகுதிக்குள் மக்கள் மீளக்குடியமர்வதற்கு ஏற்ற அடிப்படை வசதிகள் பல செய்யப்பட வேண்டியிருப்பதாக வலிகாமம் மீள்குடியேற்ற புனர்வாழ்வுக்குழு தலைவர் கூறுகின்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply