18 ஆண்டுகளுக்குபின் கொக்காவில் படையினர் வசம்

வன்னிப் பிரதேசத்தில் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் 18 வருடங்களின் பின்னர் இன்று கொக்காவில் பிரதேசத்தை முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இராணுவத்தின் 57ஆவது படைப் பிரிவு நேற்று அதிகாலை முதல் மேற்கொண்ட உக்கிரத் தாக்குதல்களையடுத்தே ஏ9 யாழ்.-கண்டி வீதியில் அமைந்துள்ள கொக்காவில் பகுதி படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஏ9 யாழ்.-கண்டி வீதியை விடுவிப்பதற்காக இராணுவத்தினர் முன்னேறிச் செல்ல ஆரம்பித்துள்ளதாக பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். 57ஆவது படைப் பிரிவினர் கொக்காவிலிலிருந்து வடக்கு நோக்கி சில கிலோ மீற்றர் தூரம் முன்னேறினர். மீண்டும் தெற்கு நோக்கி முன்னேறுகையில் நடத்திய தாக்குதலில் மாங்குளம் வரையிலான புலிகளின் சகல முகாம்களும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தாக்குதலில் கொல்லப்பட்ட புலிகளின் சடலங்களையும் காயப்பட்டவர்களையும் புலிகள் தங்களோடு எடுத்துச் சென்றுள்ளதாகவும் பிரிகேடியர் மேலும் குறிப்பிட்டார். 

18 ஆண்டுகளுக்கு முன் லெப்டினன் சாலிய உபுல் அலதெனிய வின் தலைமையில் கொக்காவிலில் இராணுவத்தினர் நிலை கொண்டிருந்தனர். 1990 ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் திகதி புலிகள் இந்த முகாமைத் தாக்கினர். இம்முகாம் அப்பகுதியில் தனிமையாக இருந்தனால் உதவிக்கு படையினர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டதால் முகாமை வாபஸ் பெறும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டது. லெப்டினன் எஸ் யூ. அலதெனியா தன்னுடன் இருப்பவர்கள் பலர் காயமுற்றுள்ளதால் அவர்களை வெளியே கொண்டுவருவது கடினம் தற்பொழுது முகாமை வாபஸ் பெறுவது சிரமம், ரவைகள், வெடிமருந்துகள் தீந்துவிட்டன என கூறியதுடன் அவருடன் இருந்த தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டது. புலிகள் முகாமை கைப்பற்றினர்.

அன்றைய தினத்துக்குப் பிறகு அதாவது 18வருடங்களுக்கு பிறகு படையினர் இப்பகுதிக்கு சென்றது இதவே முதல் தடவையாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply