11,000 முன்னாள் புலி உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் விரைவில் விடுதலை; ஏனையோரும் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படுவர்

சிறப்பு புனர்வாழ்வு முகாமிலுள்ள 11,000 மேற்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளனர்.  ஏனையோரும் கட்டம் கட்டமாக தொடர்ந்து விடுதலை செய்யப்படுவார்களென இவர்களின் புனர்வாழ்வுக்குப் பொறுப்பான அதிகாரி ஒருவர் `ரெலோ நியூஸ்`க்கு தெரிவித்தார்.

2009 மே 18க்கு பின் இராணுவத்தால் இனங் காணப்பட்ட முன்னால் புலி உறுப்பினர்கள் மற்றும் யுத்த காலத்தில் சரணடைந்த புலிகள் உட்பட சுமார் 11,000 பேருக்கு மேல் அரசின் சிறப்பு முகாம்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றனர்.  

அவர்களில் வயது, புலிகள் அமைப்பில் இருந்த காலம், ஈடுபாடு மற்றும் செயற்பாடுகள் கருத்தில் எடுக்கப்பட்டு தேர்தெடுக்கப்பட்ட ஒரு தொகுதியினர் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

மற்றவர்களுக்கும் உரிய புனர்வாழ்வு அளித்து மீண்டும் அவர்கள் சமூகத்துடன் இணைய தம்மாலான அனைத்து வசதிகளையும் செய்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வன்னியில் உள்ள 12 சிறப்பு புனர்வாழ்வு முகாம்களில் உள்ள இவர்களை பெற்றோர்கள் சென்று பார்வையிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிலுள்ள தனது 19 வயது பெண் பிள்ளையை சென்று பார்வையிட்டுவிட்டு வந்த ஒரு தாய், “அவள் இப்ப நல்ல வடிவாய் கதைக்கிறாள். கெதியாய் தனக்கு விடுதலை கிடைத்து விடுமென நம்பிக்கையோடு நல்லா இருக்கிறாள்“ என்று மகிழ்ச்சியோடு எமக்கு தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply