உண்ணாவிரத கைதிகளை `தகுதியான அதிகாரி` சந்திக்க ஸ்ரீகாந்தா ஏற்பாடு
நாடு பூராகவும் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த இரண்டு வாரங்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டுவருகின்றனர். அவர்களை `தகுதி வாய்ந்த அரச அதிகாரி` சந்திக்க ஏற்பாடு செய்துள்ளதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இரண்டு நாட்களுக்குள் பூரண அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக நீதி மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார்.
நாடு பூராகவும் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலை தொடர்பில் நீதி மறுசீரமைப்பு அமைச்சர் நேரடியாக சிறைச் சாலைக்கு வருகை தந்து உறுதிமொழி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா, அமைச்சர் மிலிந்த மொறகொடவுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் மிலிந்த மொறகொட இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா நேற்றைய தினம் முற்பகல் அமைச்சர் மிலிந்த மொற கொட மாத்தறையில் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பங்குபற்றி இருந்த போது நான் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினேன். அப்போது அவரிடம் நீங்கள் கைதிகளை நேரில் சென்று சந்திக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.
அப்பொழுது அவர் அரசியல் கைதிகளை சந்தித்து போலியான வாக்குறுதிகளை வழங்க நான் தயாராக இல்லை எனவும் அனைத் துச் சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகள் தொடர்பிலான விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் கைதிகள் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இரண்டு நாட்களுக்குள் பூரண அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தார். அதன் போது நான் அவரிடம் கைதிகளை நீங்கள் சென்று சந்திக்காவிடினும் உங்கள் சார்பில் தகுதி வாய்ந்த அரச பிரதிநிதி ஒருவரை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்தேன்.
அதனை ஏற்றுக்கொண்ட அவர் பிரதிநிதி ஒருவரை அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் என். சிறிகாந்தா மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply