வடக்கு கிழக்கில் 1,50,000 வீடுகள் அமைக்கத் திட்டம்: மஹிந்த சிந்தனை- II

மஹிந்த சிந்தனை திட்டத்தின் ஊடாக வடக்கு கிழக்கில் 1 லட்சத்து 50 ஆயிரம் வீடுகளை அமைக்க இவ்வருட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கப்படவுள்ளதாக அரச இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன.

மஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கின் கீழ் நாட்டில் வீடில்லாதவர்களின் வசிப்பிட வசதிக்காக 6 லட்சம் வீடுகளை எதிர்வரும் 6 வருடங்களில் அமைக்கும் திட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கில் 1,50,000 வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

இவற்றுக்குப் புறம்பாக அரச ஊழியர்களுக்கான 25 வீடமைப்புத் திட்டங்கள் பல்கலைக்கழக உத்தியோகத்தர்களுக்கான 5000 வீடுகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டம் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் உள்ளவர்களுக்கான 3 வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் கொழும்பு குடிசை வாசிகளுக்கான வீடமைப்புத் திட்டம் போன்றவையும் மேற்கொள்ளப்படவுள்ளன.

கிராமப்புரங்களில் வீடு இல்லாதவர்களுக்கும் மீனவ சமூகத்தவர்களுக்கும் வசிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply