எஞ்சியுள்ள 34,604 குடும்பங்களையும் துரிதமாக மீள்குடியேற்ற நடவடிக்கை

வடக்கு, கிழக்கில் போர்ச்சூழல் காரணமாக இடம்பெயர்ந்தோரில் பெரும்பாலானவர்கள் மீள்குடியேற்றப்பட்டுள் ளதோடு இன்னும் 34,604 குடும்பங்களைச் சேர்ந்த 78,165 பேரே மீளக்குடியமர்த்தப்பட உள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரிசிறி தெரிவித்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் இவ்வருடம் ஜனவரி 14 ஆம் திகதி வரை போர்ச்சூழல் காரணமாக இடம்பெயர்ந்தவர்களில் 40,925 குடும்பங்களைச் சேர்ந்த 1,31,600 பேர் தத்தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் 18,948 குடும்பங்களைச் சேர்ந்த 59,630 பேர் மீளக்குடியமர்த்தப்பட்டுள் ளனர். மன்னாரில் 3,182 குடும்பங்களைச் சேர்ந்த 10,349 பேரும் வவுனியாவில் 7,395 குடும்பங்களைச் சேர்ந்த 23,979 பேரும் முல்லைத்தீவில் 3,387 குடும்பங்களைச் சேர்ந்த 10,995 பேரும் கிளிநொச்சியில் 4,836 குடும்பங்களைச் சேர்ந்த 16,582 பேரும் மீளக்குடியமர்த்தப்பட் டுள்ளனர்.

கிழக்கில் மட்டக்களப்பில் 897 குடும்பங்களைச் சேர்ந்த 2,514 பேரும் திருகோணமலையில் 2,111 குடும்பங்களைச் சேர்ந்த 6,700 பேரும் அம்பாறையில் 191 குடும்பங்களைச் சேர்ந்த 591 பேரும் மீளக்குடி யமர்த்தப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் கூறினார்.

இதேவேளை வவுனியா மாவட்ட 8 நலன்புரி முகாம்களில் 32,080 குடும்பங்களைச் சேர்ந்த 77,328 பேர் தத்தமது கிராமங்களில் மீளக்குடியமர்த்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. மன்னார் மாவட்டத்தில் உள்ள 4 நலன்புரி நிலையங்களில் உள்ள 524 குடும்பங்களைச் சேர்ந்த 1,537 பேர் தத்தமது கிராமங்களில் மீளக்குடியமர்த்தப்பட உள்ளனர் என்றும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்தார்.

மீள்குடியேற்றப் பணிகளை ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன் பூர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ் துரித நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply