5 பெண்கள் உட்பட 14 பேர் புலிகளின் கொடும்பிடியில் இருந்து தப்பி ஓமந்தை வந்தனர்.

புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பி 14 பேர் இன்று (டிச. 01) ஓமந்தைச் சோதனைச் சாவடியை வந்தடைந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 5 பெண்கள் அடங்கலாக ஏ-9 பாதையூடாக வந்த இவர்கள் புதுக்குடியிருப்பு, நெடுங்கேணி பகுதிகளில் இருந்து பாதுகாப்புத் தேடி அரச கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு வந்ததாக அத்தகவல் மேலும் தெரிவிக்கிறது. கடந்த சில நாட்களாக பெய்த பெரும் மழை சற்று குறைவடைந்துள்ளதால் இனி அதிக மக்கள் புலிகளின் பிடியிலிருந்து வெளியேறி பாதுகாப்புத் தேடி விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வருவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

வன்னியில் உக்கிரமடைந்திருக்கும் மோதல்களால் அங்கிருந்து வெளியேறும் பொதுமக்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது. இதுவரை 424பேர் ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடிக்கு வந்துள்ளனர். மாங்குளம் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியதைத் தொடர்ந்தே தாம் அங்கிருந்து வெளியேறிக்கூடியதாக இருந்ததாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply