ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுத் திட்டம் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடு
ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுத் திட்டம் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் நிலைப்பாடு என கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிளவுபடாத இலங்கை என்ற கொள்கையின் அடிப்படையில் கூட்டமைப்பு செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுத்தல், வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு பிரதான வேட்பாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வுத் திட்டம் என்பதே அரசியல் கட்சிகளின் நிலைப்பாடாக அமைந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிளவுபடாத இலங்கைக்குள் அரசியல் ரீதியான தீர்வுத் திட்டம் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பிலேயே இரண்டு பிரதான வேட்பாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை பிளவுபடுத்தும் வகையிலான எந்தவொரு யோசனைத் திட்டத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறுகிய அரசியல் லாபங்களுக்காக இனங்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்களை அரசியல் கட்சிகள் வெளியிடக் கூடாது என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply