பொன்சேகாவுக்கு வாக்களித்தால் கிழக்கை முஸ்லிம்கள் ஆள முடியும்

கிழக்கு மாகாண முஸ்லிம்கள் அனைவரும் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் நாம் கிழக்கு மாகாண சபையினை ஆள முடியுமென முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் சரத் பொன்சேகாவை ஆதரித்து நடாத்தப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசும் போதே இவ்வாறு ஹக்கீம் கூறியுள்ளார் .

கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆயுத குழுக்களை கலைத்து விட்டு நாம் மாகாண சபையினை நிர்வகிக்க முடியும். அதற்கு நீங்கள் எமது திட்டத்திற்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என்றார் ஹக்கீம். நாம் போட்ட திட்டத்தின் படியே நடக்கின்றது. அந்த திட்டம் உங்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றால் நாம் மாகாண சபையினை நிர்வகிப்போம் என்று மேலும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply