வடக்கு கிழக்கு மீள இணைப்பு இல்லை: மல்வத்து பீடத்திடம் சரத் உறுதி
வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீளவும் இணைக்கப்பட மாட்டாது என கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகளிடம் ஜெனரல் சரத் பொன்சேகா உறுதியளித்துள்ளார்.
கண்டி மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பௌதீக ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படக் கூடிய எந்தவொரு தீர்மானத்தையும் தாம் ஒருபோதும் எடுக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுத்த வடக்கு கிழக்கு மாகாணங்களை தாமே மீள இணைப்பதற்கு இணங்கியதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply