வவுனியாவில் அரச குடியிருப்பை சிவசக்தி ஆனந்தன் ஆக்கிரமிப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வவுனியாவில் அரச குடியிருப்பொன்றை சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா இரயில் நிலையத்துக்கு முன்பாக உள்ள அரசுக்கு சொந்தமான குடியிருப்பை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கடந்த எட்டு ஆண்டுகளாக சட்ட விரோதமாக ஆகிரமித்துள்ளதை வவுனியா கச்சேரில் பணி புரியும் மேல்நிலை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.
சிவசக்தி ஆனந்தன் ஆக்கிரமித்துள்ள வவுனியா இரயில் நிலையத்துக்கு முன்பாக உள்ள அரச குடியிருப்பு வவுனியா கச்சேரிக்கு சொந்தமானது எனவும் அந்த கச்சேரி அதிகாரி தெரிவித்தார்.
சிவசக்தி ஆனந்தன் வவுனியா கச்சேரிக்கு சொந்தமான அரச குடியிருப்பில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டுமென கோரும் `கோர்ட் நோட்டீஸ்` வவுனியா நீதிமன்றத்தினூடாக அனுப்பப்பட உள்ளதாகவும் அந்த கச்சேரி அதிகாரி தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply