12 இலட்சம் வாக்குகள் முன்னணியில் ஜனாதிபதி

உள்நாட்டு, வெளிநாட்டு சில அமைப்புக்கள் நடத்திய கருத்துக் கணிப்பின் படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 12 இலட்சம் வாக்குகளால் முன்னணியில் இருப்பதாக பொறியியல் சேவைகள் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ஜனாதிபதி 27 ஆம் திகதி 15 சதவீத மேலதிக வாக்குகளால் வெற்றி பெறு வது உறுதி என்று அவர் மேலும் தெரிவித்தார். மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்: தேசிய பிரச்சினைக்கும், பொருளா தாரத்திற்கும் உரிய தீர்வு முன்வைக்க முடியாத சரத் பொன்சேகாவினால் எதனையும் செய்ய முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நகர்ப்புறங்களையும், கிராமப் புறங்களையும் சேர்ந்த பெருந்தொகையானோர் ஜனாதிபதிக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். சரத் பொன்சேகாவும், அவரை ஆதரிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் எந்தவொரு குறிக்கோளும் இல்லாமல் நாளுக்கு நாள் குழப்பத்தில் மூழ்கியுள்ளன.

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து முற்றிலும் அறியாமை முறைமையே சரத் பொன்சேகாவிடம் காண முடிகின்றது.

1977ல் எட்டு இறாத்தல் தானியம் தருவதாக ஜே. ஆர். அன்று மக்களை ஏமாற்றினார். இன்றைய மக்கள் 21 ஆம் நூற்றாண்டில் வாழ்பவர்கள். எனவே அவ்வாறு இலகுவாக ஏமாற்ற முடியாது.

ஐ.தே.க., ஜே.வி.பியை நம்ப முடியாத நிலையிலுள்ள சரத் பொன்சேகா இராணுவத்தைச் சேர்ந்த தனது நண்பர்களை தேர்தல் தொகுதி இணைப்பாளர்களாக நியமித்துள்ளார். இது பொன்சோகாவுக்கும் ஜே.வி.பி., ஐ.தே.க. உறவுகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை காணப்படுகின்றது.

இதனால் அந்த பிரதேச அமைப்பாளர்களும் ஆதரவாளர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply