ராஜீவ் கொலை குற்றவாளிகள் நளினி உள்பட 11 ஆயுள் கைதிகள் விடுதலை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி நளினி வேலூர் பெண்கள் ஜெயிலில் 18 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளார். அவர் தன்னை விடுதலை செய்யகோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் விடுதலையை உறுதி படுத்த அறிவுரை கழகம் அமைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வரும் ராபர்ட் பயாஸ் மற்றும் நளினி இருவரும் தங்கள் விடுதலையை வலியுறுத்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உண்ணாவிரதம் இருந்தனர்.

அவர்களிடம் சிறைதுறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனையடுத்து இருவரும் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

இதனை தொடர்ந்து வேலூர் ஜெயிலில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வது குறித்து பரிந்துரை அளிப்பதற்காக அறிவுரை கழகம் அமைக்கலாம் என்று சிறைத்துறை நிர்வாகம் அரசுக்கு அறிக்கை அளித்தது.

அதில் ராஜீவ் கொலை குற்றவாளிகள் நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் உள்பட 11 பேர் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுக்கு மேலாக ஜெயிலில் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் வேலூர் கலெக்டர் ராஜேந்திரன் சிறை கண்காணிப்பாளர், மாவட்ட நீதிபதி, தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் குற்றவாளிகள் தரப்பு ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட அறிவுரை கழகம் அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் வேலூர் கலெக்டர் ராஜேந்திரன் சிறை கண்காணிப்பாளர், மாவட்ட நீதிபதி, தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் குற்றவாளிகள் தரப்பு ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட அறிவுரை கழகம் அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.

குற்றவாளிகளின் தண்டனை மற்றும் நன்னடத்தை குறித்து இந்த குழு விவாதிக்கும். பின்னர் அவர்களை விடுதலை செய்வது குறித்து தங்கள் முடிவை இந்த குழு அரசுக்கு அனுப்பும். அதன் மீது அரசு இறுதி முடிவு எடுக்கும்.

அறிவுரை கழக கூட்டம் நாளை  நடைபெறும் என தெரிகிறது. நிர்வாக காரணங்களுக்காக கூட்டம் தள்ளி வைக்கப்படலாம் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply