24 தமிழ் இளைஞர்கள் நேற்று விடுதலை; 50 பேர் இன்று விடுதலை; 26 பேர் புனர்வாழ்வு நிலையம் அனுப்பி வைப்பு: ஆறுமுகன் தொண்டமான்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்களில் 24 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். மேலும் 28 இளைஞர்கள் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இன்று 50 இளைஞர்கள் விடுதலை செய்யப்படுவார்களென அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நேற்று தெரிவித்தார்.

நுவரெலியா கிரேன் விருந்தகத்தில் நேற்று ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர், இந்தத் தகவலை வெளியிட்டார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேண்டுகோளுக்கமைய அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கின்றதென அமைச்சர் ஆறுமுகன் கூறினார்.

விடுதலை செய்யப்பட்ட இளைஞர்களில் இருவர் மலையக இளைஞர்கள் ஆவர். டிக்ஷன் அன்டனி, கணேசன் சிவகுமார் ஆகிய இரு இளைஞர்களே மலையகத்தில் விடுவிக்கப்பட்டவர்களாவர். இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மேலும் கூறியதாவது :

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எமக்கு வழங்கிய உறுதிமொழியை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். நீண்டகாலம் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டுள் ளனர். மேலும் படிப்படியாக பலர் விடுவிக்கப்படுவார்கள்.

மலையக மக்கள் என்றும் ஜனாதிபதி மஹிந்தவை மறக்கமாட்டார்கள். அவரின் காலத்திலேயே மலையகம் அபிவிருத்தி கண்டுள்ளது. மக்கள் சந்தோஷமாக வாழும் சூழ்நிலையை அவர் இங்கு ஏற்படுத்தியிருக்கிறார்.

கொட்டகலை, ராகலை ஆகிய இடங் களில் நடந்த கூட்டங்களைப் பார்த்தால், அலை அலையென மக்கள் திரண்டு காணப்பட்டனர். மலையக மக்கள் ஜனாதிபதியை மீண்டும் வெற்றிபெறச் செய்வார்கள் என்பதற்கே ராகலை, கொட்டகலைக் கூட்டங்கள் உதாரணமாக விளங்குகின்றன என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply