மஹிந்த 60 விழுக்காடு வாக்குகளால் வெல்வார்

60 விழுக்காடுகளுக்கு அதிகமான வாக்குகளால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டுவார் என களனி பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட புதிய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

களனி பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் கலாநிதி ரோஹக லக்மன் பிரியதாச தலைமையில் இந்த கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் `சுபராத்தி` எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலாநிதி ரோஹக லக்மன் பிரியதாச ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 60 வீதத்துக்கு அதிகமான வாக்குகளால் வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவாரென தெரிவித்தார்.

கருத்துக் கணிப்புக்களின் அடிப்படையில் நாட்டின் மிகவும் பிரபல்யமான அரசியல்வாதியாக தொடர்ந்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விளங்கி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகர் எல்லை உள்ளிட்ட நகர்ப் புறங்களில் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு அதிக வரவேற்பு காணப்படுவதாகவும், கிராமப் புறங்களில் ஜனாதிபதிக்கு அதிக வரவேற்பு காணப்படுவதாகவும் கருத்துக் கணிப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply