யாழ்ப்பாணத்தில் இலங்கைப் பங்குச் சந்தைக் கிளை

வடக்கு, கிழக்குப் பகுதியில் உள்ள முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக யாழ்ப்பாணத்தில் இலங்கை பங்குச்சந்தையின் கிளை அலுவலகம் ஒன்றைத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் விவசாய வளம் மிகுதியாக இருக்கின்றது. எனவே அதைச் சார்ந்த உயிரியல் வேதியல், உரம் உள்ளிட்ட தொழிற்துறைக்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால், இதன் அடிப்படையில் வெளிநாட்டு நிறுவனங்களை, குறிப்பாக இந்திய முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்க இலங்கை திட்டமிட்டுள்ளது.

இம்முயற்சியின் ஓர் அங்கமாகத் தற்போது யாழ்ப்பாணத்தில் இலங்கை பங்குச் சந்தையின் கிளையை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளன.

அலுவலகக் கட்டிடத்தைத் தேர்ந்தெடுக்கும் பணியில் பங்குச் சந்தை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இம்மாத இறுதிக்குள் கிளை அலுவலகத்துக்கான கட்டிடம் தயாராகி விடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பெப்ரவரி மாத தொடக்கத்தில் கிளை அலுவலகம் திறக்கப்பட்டுவிடும் என இலங்கை பங்குச்சந்தை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply