யாழ். வலம்புரி கூட்டமைப்புக்கு எச்சரிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலை அடுத்து வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலிலேயே கண்ணாயிருப்பதாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் தினசரி நாளிதழ் `வலம்புரி` விசனம் தெரிவித்துள்ளது.

’’…தமிழரசுக் கட்சியை புதுப்பித்து, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பதவி பெறும் நோக்கமும் அதற்கான ஒன்றுகூடல்களும் நடக்குமாக இருந்தால், யாழ்ப்பாண மண்ணில் சுதந்திரமான-சேவை நோக்கமுள்ள மனிதர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்குவர். அவ்வாறு களமிறங்கினால் அது வலம்புரிச் சங்கு எடுத்து களமாடிய கண்ண பரமாத்மாவின் குருஷேத்திர வெற்றியாகவே இருக்கும்’’ என யாழ். வலம்புரி தனது இன்றைய நாளிதழ் ஆசிரியர் தலையங்கத்தில் கூட்டமைப்பினருக்கு ஒரு அரசியல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

’’ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் சில நாட்கள் இருக்கின்ற போதிலும் தேர்தல் பிரசாரம் யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப் பகுதிகளில் போதுமானதாக இல்லை என்பதைக் கூறித்தான் ஆக வேண்டும். இங்கு தேர்தல் பிரசாரம் என்பது மந்த நிலையில் உள்ளது. தமிழ் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டுமென்ற தெளிவு இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.’’ எனக்குறிப்பிடும் வலம்புரி, ’’ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்தது. அதற்கான சில காரணங்களையும் பத்திரிகைகளில் வெளியிட்டு இருந்தது. ஆனால் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட பிரசாரம் என்வென்றால் எதுவுமே இல்லை. ஆக, ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாகக் கூறிவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசாதிருப்பது எதற்காக’’ என கூட்டமைப்பின் இன்றைய  அரசியல் நிலைப்பாட்டை `வலம்புரி` கேள்விக்குட்படுத்தியுள்ளது.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply