சகல அரச நிறுவனங்களிலும் தமிழ் மொழியை அமுல்படுத்த பல நடவடிக்கைகள் முன்னெடுப்பு: எம். எஸ். விக்கிரமசிங்க

சகல அரசாங்க நிறுவனங்களும் தமிழ் மொழியை அமுலாக்குவதற்கு சாத்தியமான பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு அரச கருமமொழிகளைச் செயற்படுத்துவதற்குள்ள குறைபாடுகளை அடையாளம் கண்டு அவற்றை நிவர்த்திக்கவும் ஆவன செய்யப்பட உள்ளதாக அரசியல் விவகார தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் திருமதி எம். எஸ். விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சகல அரச நிறுவனங்களிலும் அரச கருமமொழிக் கொள்கைகளை நடைமுறைப் படுத்தும் அலுவலர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கான பொறுப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளதாக செயலாளர் குறிப்பிட்டார்.

அரச கரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக பொறுப்புக்களைக் கையளிப்பது தொடர்பாக சகல அமைச்சுக்களினதும் செயலாளர்களுக்கும் மாகாண சபைகளின் தலைமைச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், உள்ளூராட்சி நிறுவனத் தலைவர்கள், மாகாண அரசாங்க சேவை ஆணைக் குழுச் செயலாளர்களுக்கு சுற்றுநிருபம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply